இதுதான் கண்டிஷன்... லிஸ்ட் போட்டு அடுக்கிய நயன்தாரா

சென்னை: திருமணம் முடிந்ததும் நயன்தாரா போட்ட அடுக்கடுக்கான கண்டிஷன்களால் தயாரிப்பாளர்கள் அதிர்ந்துதான் போய் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது.

ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு டுவிட்டர், இன்ஸ்டா, தனது செல்போனில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு, தயாரிப்பாளர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம் நயன்தாரா. இனி நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் முத்த காட்சிகள், படுக்கை காட்சிகளின் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மாற்றும் இயக்குனர்களிடம் நயன்தாரா கூறியுள்ளாராம்.

நயன்தாராவின் இந்த முடிவு, தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.