சிம்பு உடலை குறைத்ததன் காரணம் இதுதான்: நடிகர் மஹத் தகவல்

படத்திற்காக மட்டும் சிம்பு தன் உடம்பை குறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் மஹத்.

சிம்புவின் உடல் எடையை வைத்து அவரை பிடிக்காத ரசிகர்களும், பல மீடியாக்களும் படு கேவலமாக விமர்சனம் செய்தது. அதுமட்டுமில்லாமல் சிம்பு திரையில் தோன்றினால் அவரே முழு திரையையும் உடம்பால் அடைத்து விடுவதாக கேலி செய்து வந்தனர்.

அதற்கெல்லாம் தகுந்த பதிலடி கொடுக்கும்படி ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதனை பார்த்த பலரும் சிம்புவா இது எங்களால் நம்ப முடியவில்லையே என வாயை மூடி கொண்டனர். சிம்புவின் உடலை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.

முதலில் படத்திற்காக தான் சிம்பு உடல் எடையை குறைத்ததாக பலரும் கூறினர். ஆனால் அது உண்மை இல்லை என சிம்புவின் நண்பரான மகத் மற்றும் பிட்னஸ் டிரெய்னர் சந்திப் ராஜூ பிரபல பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ளனர்.

அந்த பேட்டியில் சந்திப் ராஜ் முதலில் மகத்திற்கு டிரெய்னராக சிக்ஸ்பேக் வர காரணமாக இருந்துள்ளார். இதனை பார்த்து சிம்பு எனக்கும் டிரெய்னராக வாருங்கள் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடந்த வருடம் நவம்பர் மாதம் சிம்புவை நேரில் சந்தித்தேன். அப்போது அவரது உடல் எடை 101 கிலோ.

ஆனால் சிம்புவிற்கு முதலில் தொப்பையை குறைக்க வேண்டுமென்கிற ஆசைதான் இருந்ததாம். பின்பு கடின உழைப்பால் உடல் எடையை 31 கிலோ குறைத்து தற்போது 71 கிலோ உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல நடிகர்களும் படத்திற்காக உடல் எடையை குறைப்பார்கள், ஆனால் சிம்பு உயிராக கருதும் அவரது ரசிகர்களுக்காகவும், பலரும் என்னை விமர்சித்த நேரத்தில் என்னுடன் துணை நின்ற நண்பர்களுக்காகவும் தன் உடல் எடையை முழுவதும் குறைந்துள்ளதாக மகத் மற்றும் ஃபிட்னஸ் டிரெய்னர் சந்திப் ராஜு கூறியுள்ளனர்.