இந்த வார நாமினேஷன் படலம் தொடங்கியது!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும்.அதில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

கடந்த வாரம் ஆஜித் குறைந்த வாக்குகளை பெற்று இருந்தாலும் எவிக்ஷன் பாஸ் இருந்ததால் அவர் எவிக்சனில் இருந்து தப்பித்தார். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வார நாமினேஷன் படலம் தொடங்கியது குறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் பாலாஜியை ரியோவும், ரியோவை பாலாஜியும் மாறி மாறி நாமினேட் செய்து கொள்கின்றனர். மேலும் சனம்ஷெட்டியை ஷிவானி மற்றும் ரம்யாவும், அனிதாவை ஜித்தன் ரமேஷ் மற்றும் கேப்ரில்லாவும், நாமினேட் செய்கின்றனர்.

மேலும் யார் யாரை நாமினேட் செய்கின்றனர் என்பதை இன்றைய அடுத்த புரமோவிலும், இன்றைய நிகழ்ச்சியிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.