ரத்தம் படத்தின் டிரைலர் வெளியானது... ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: ரத்தம் படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த டிரைலர் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன்.

மின்னலே, அனேகன் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இவர் இயக்கிய அடுத்த படம் ‘ரத்தம்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பரபரப்பான காட்சிகளுடன் சமூக வலைதளங்களில் டிரைலரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ‘ரத்தம்’ படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.