வருது பார்ட்-2... 7 ஜி ரெயின்போ காலனி என தகவல்

சென்னை: பார்ட் -2 வருது... இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார். தற்போது, கதை, திரைக்கதை பணிகள் முடிந்ததுள்ளதால் செப்டம்பர் மாத துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனஸ்வரா ’சூப்பர் சரண்யா’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்தாண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.