விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம்

சென்னை: விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது. அந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் பங்கேற்று பாப்புலர் ஆனவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக அவர் பல ஷோக்களில் பெண் கெட்டப் போட்டு வந்திருப்பார். குறிப்பாக அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் குறைந்ததால் சொந்தமாக youtube சேனல் நடத்தி வருகிறார்.
தற்போது நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவருக்கு தற்போது ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.