ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வியாபாரம் ஆன விஜய்யின் வாரிசு படம்

சென்னை: செம வியாபாரம்... பட ரிலீசுக்கு முன்பாகவே கோடிக்கணக்கில் வியாபாரத்தை நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சாத்தியப்படுத்தி இருப்பதாக கோலிவுட்டில் வாயைப் பிளக்கிறார்கள்.

தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வியாபாரத்தில் டாப் கியரில் ஏறிக் கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவராகவும், ரசிகர்களால் இளைய தளபதியாகவும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். .


நடிகர் விஜய்யின் அடுத்த படமான வாரிசு திரைப்படத்தை, தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கிறார். தோழா படம் பெரிய வெற்றியடைந்து, கதையம்சம் உள்ள படமாகவும் பேசப்பட்டது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தண்ணா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ, யோகி பாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

தமன் எஸ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் திருநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.


இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 கட்டங்களாக நடக்கும் எனவும் படத்தின் மொத்த காட்சிகளையும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகை அன்றும் படத்தின் டீசர் ஆங்கில புத்தாண்டு அன்றும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் வாரிசு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் ஆடியோ ரைட்ஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 60 கோடிக்கு அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை 50 கோடிக்கு சன் டிவியும், படத்தின் ஆடியோ உரிமையை 10 கோடிக்கு டி சீரிஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது