லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் பெயர் விக்ரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பு வெளியாகியுள்ளது. இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டு கமல் அசத்தினார்.

மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்த லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் வைத்து மாஸ்டர் என்ற படம் இயக்கியுள்ளார்.

இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு எவென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பது போல் வெளியிட்டனர்.

இப்படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கமல் ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படமும் விக்ரம் என்ற தலைப்பில் வெளியாகி இந்த டீஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.