பிரபுதேவா மகனின் வைரல் போட்டோ.. அப்பா போல மகன்..

பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவாவின் மகனின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அடுத்த ஹீரோ ரெடியாகிவிட்டார் என்கிறார்கள்.

மறைந்த நடிகர் பாண்டுவை மிஸ் பண்ணுவதாகக் கூறி அவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் பிரபுதேவா.

அந்த புகைப்படத்தில் பிரபுதேவாவின் மகனை பாண்டு ஆசிர்வதிப்பது போன்று உள்ளது. புகைப்படத்தை பார்த்தவர்களோ, ஜூனியர் பிரபுதேவா அப்படியே அப்பா மாதிரி இருக்கிறார். நடிக்க வந்த புதிதில் பிரபுதேவா ஒல்லியாக தான் இருந்தார். .

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாண்டு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் தான் பாண்டுவை நினைத்து பிரபுதேவா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.