நயன்தாரா குழந்தைகள் வாடகைதாய் விவகாரம் என்ன ஆகும்?

சென்னை : என்னதான் நடந்தது. நயன்தாரா வாடகை தாய் விவகாரத்தில் இனி என்ன நடக்கும் என்று கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணமான 4 மாதங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது.

இந்நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்ததாக தகவல் பரவியது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் யாரும் குழந்தை பெற முடியாது. அதற்கு பல விதிகள் உள்ளன. அந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவப் பணிகள் துறை இயக்குநருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.


இது தொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வாடகைத் தாயாக உதவிய பெண் யார் என்பதும் தெரிய வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த பெண் நயன்தாராவின் உறவினர் என கூறப்படுகிறது.

துபாயில் நயன்தாரா முதலீடு செய்துள்ள சில தொழில்களை அந்த பெண் தான் கவனித்து வருகிறார். அந்த நெருங்கிய தொடர்பின் மூலம் வாடகைத் தாயாக இருக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. துபாய் பெண். இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் துபாயில் வாடகைத் தாய்க்கு அனுமதி இல்லை. அந்த நாட்டின் சட்டப்படி வாடகைத் தாய் முறை தடைசெய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வது கிரிமினல் குற்றமாகும். அதனால் அந்த நாட்டில் வாடகைத் தாயாகப் பணிபுரிந்தாலும் அந்தப் பெண்ணுக்கும், சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கும்தான் பிரச்சனை. இந்த நிலையில், இதுவரை விசாரணையில் அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை. அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.