பிரின்ஸ் படம் எப்போது ரிலீஸ்... படக்குழு அறிவிப்பு

சென்னை: ‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது தமிழ் திரை உலகில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிரின்ஸ்’.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனின் மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரின்ஸ்’ படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், ‘பிரின்ஸ்’ படம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்ததுடன், போஸ்டரையும் வெளியிட்டது.

இந்நிலையில், ‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்தஉற்சாகத்தில் உள்ளனர்.