அவரா? இவரா? விவாதத்திற்கு விழுந்தது முற்றுப்புள்ளி... கமல்தானாம்

சென்னை: அவரா, இவரா என்று நடந்து கொண்டிருந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது விஜய் டிவி நிர்வாகம். பிக்பாஸ் 6 சீசனை இரண்டாயிரத்து வழங்குவது கமல் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவந்த இந்நிகழ்ச்சியை சில காரணங்களால் அவரால் இந்த சீசனை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்கள் ஆக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகும் போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய கமலஹாசன் அதன் பின்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார்.

அப்போது சிம்புக்கு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனால் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. கமல் இந்த சீசனை தொகுத்து வழங்க மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

கமலின் விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி கமலஹாசனை தொடர்பு கொண்டு பேசி உள்ளது. அப்போது கமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.