ஓ.டி.டி.-யில் வெளியாகுமா நயன்தாராவின் திருமண வீடியோ? ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது..

நயன்தாரா-இயக்குனர்விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், லேட்டஸ்ட் தகவல் ஒன்று நயன்தாரா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 6 ஆண்டு காதலுக்கு பின்னர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த மாதம் 9ம் தேதி மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

மிக நெருங்கிய நட்பு வட்டாரங்கள், திரைத்துறையினர் மட்டுமே இந்த திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.நயன்தாரா திருமணத்தில் போட்டோ மட்டும் வீடியோக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே கசிந்து விடாத அளவுக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், திருமணம் நடந்த அன்று மதியம் 2 மணிக்கு மேல் திருமண புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். இதன் பின்னர் ஒரு மாதமாக எந்த புகைப்படமும் வராத நிலையில் கடந்த சில நாட்களாக ஷாருக்கான், மணிரத்தினம், ரஜினிகாந்த் விஜய் சேதுபதி சூரியா, ஜோதிகா உள்ளிட்டோருடன் மணமக்கள் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கின.

முன்னதாக நயன்தாரா திருமண வீடியோ ஓ.டி.டி. தளத்திற்கு அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதில் மட்டுமே வீடியோ வெளியாகும் என்றும் பரவலாக பேசப்பட்டது. இதற்காக ரூபாய் 25 கோடியை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ஓ.டி.டி. நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நயன்தாரா திருமண வீடியோவை ஓ.டி.டி. தளம் வாங்கவோ அல்லது வெளியிட மறுத்துவிட்டதாகவோ தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் விக்னேஷ் சிவன் தரப்பில் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவருவதாக கூறப்படுகிறது. மேலும், திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களிடம் நயன்தாரா திருமண வீடியோவை பார்ப்பதற்கான ஆர்வம் அதிகம் இல்லை என்பதே யதார்த்தம்.