ரஜினி மகள் வீட்டில் நகைகள் திருடிய பெண் கோர்ட்டில் மனு

சென்னை: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி தனது வங்கி கணக்கு முடக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து நகைகள் திருடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- ஈஸ்வரி இதைத்தொடந்து பணிப்பெண் ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வரி அவரது மகள் பிருந்தா மற்றும் மஞ்சுளா ஆகியோரது வங்கி கணக்குகளை முடக்கி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மந்தவெளி கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஈஸ்வரி, மஞ்சுளா மற்றும் பிருந்தா ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தங்களுடைய கடின உழைப்பில் சம்பாதித்து வைத்திருக்கும் வங்கி கணக்குகளை முடக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனுவிற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.