முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இணைந்த யூடியூப் பிரபலம்!

பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கயிருக்கும் அடுத்த படத்திற்கு 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாந்தனுவுடன் பாக்யராஜ், யோகி பாபு, மதுமிதா, ரேஷ்மா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தற்போது யூடியூப் பிரபலம் ஸ்ரீராம் கிருஷ் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யூடியூப் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து யூடியூபே ஸ்ரீராம் கிருஷ் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சாந்தனு ஜோடியாக முதல்முறையாக அதுல்யா ரவி நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைக்கின்றார். ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவில், ஜொமெய்ன் படத்தொகுப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.