ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிஸ்கோத் படத்தை கைப்பற்றியது ஜீ தமிழ் சேனல்

தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது சந்தானத்தின் பிஸ்கோத் படம். இந்த படத்தை ஜீ தமி சேனல் கைப்பற்றியுள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் சந்தானம் காமெடி நடிகராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக அவதாரமெடுத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நடிப்பில் 'பிஸ்கோத்' திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தில் தாரா அலிசா ,லொள்ளு சபா மனோகர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் பிஸ்கோத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனல் பெற்றுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.