உங்கள் ரேஷன் கார்டை தொலைந்து விட்டதா ஈஸியா பெறலாம்

தமிழகத்தில் ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாகவும், இருப்பிட சான்றாகவும் உள்ளது. இந்த முக்கிய ஆவணத்தை நீங்கள் அதனை தொலைத்து விட்டால் இனி கவலைப்பட வேண்டாம். மீண்டும் எவ்வாறு பெறுவது என்பது பற்றி இங்கே காண்போம்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அரசு விநியோகித்து கொண்டு வருகிறது. மேலும் அத்துடன் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் தற்போது ரேஷன் கார்டு பயன்படுகிறது.

இதையடுத்து தற்போது இத்தகைய முக்கிய ஆவணத்தை ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே விண்ணப்பித்து பெறலாம். மேலும் அத்துடன் கார்டு தொலைந்து விட்டாலும் ஆன்லைன் மூலமாகவே மீண்டும் பெற்று விடலாம்.


வழிமுறைகள் :

https://www.tnpds.gov.in/ என்ற இணையப்பக்கத்திற்கு செல்லவும்
அதில் உங்களது ஐடி மற்றும் பாஸ்வோடை உள்ளீட்டு லாகின் செய்யவும்.
அடுத்து வரும் பக்கத்தில் tnpds ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும்.
மேலும் விவரங்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதனை உங்களின் ரேஷன் கார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து மீண்டும் ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறைக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகலாம்.