Whatsappல் வந்திருக்கும் புது அப்டேட்

இந்தியா: வீடியோ காலில் கேம் விளையாடலாம் ...உலகளவில் மக்கள் அதிகமாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த செயலி அமெரிக்காவை தாண்டி பல்வேறு நாடுகளில் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்ஆப் தளத்தில் பல முக்கிய அப்டேட் வெளியாகி கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் புதிதாக வந்த அப்டேட் ஒன்று மக்களை கவரும் வகையில் இருக்கிறது. அது என்ன என்பது பற்றி பார்க்கலாம். அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் வீடியோ கால் செய்யும் போது எமோஜிகளை அனுப்பும் வசதியைச் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தி இருக்கிறது.


அதே போன்று வாட்ஸ்அப் வீடியோ வீடியோ காலின் போது, நீங்கள் சில குறிப்பிட்ட சைகைகள் செய்தால் அது குறிப்பிட்ட ஈமோஜிகளை காட்டும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதாவது வீடியோ காலின் போது விரல்களை அமைதிக்கான சைகை காட்டினால் உங்கள் திரையில் பலூன்கள் வெடித்துச் சிதறும். அதே போல இதய சைகை காட்டினால் இதய ஈமோஜி திரையில் வரும். இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.