உடல் எடை குறையணுமா... கிரீன் டீ சாப்பிடுங்கள்!!!

சென்னை: பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி, டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன் டீ குடித்தால் விரைவில் எடை குறைப்பு உண்டாகும் என்ற நம்பிக்கை தான்.


உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள். இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
தினமும் க்ரீன் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், உங்கள் சருமத்தையும், தலை முடியையும் மேம்படுத்த உதவும். தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகளை எரித்து, தேவையற்ற கொழுப்புகள் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.


கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. இது இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.