எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்?

தினமும் இரவு எவ்வளவு நேரம் தூங்கினாலும் மறுநாள் தூங்கி எழுந்திருக்கும்போது புத்துணர்வாக உணர முடிவதில்லை. மீண்டும் சோர்வாகவும் தூக்கக்கலக்கமாகவுமே உணர்கிறேன். புத்தகம் படிக்கும்போதும் லேப்டாப்பில் வேலை பார்க்கும்போதும் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது.

இதற்கு என்ன காரணம். பலவருடமாக இப்படித்தான் உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

அவரது அறிவுறுத்தலின் பேரில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, அதில் FBC, B12, Ferritin, Vitamin D, TSH, U& E, HBA1C, LFT, CRP போன்றவற்றின் அளவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.எல்லா டெஸ்ட்டுகளும் நார்மலாக இருந்தால், உங்களுக்கு இருப்பது `க்ரானிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்' (Chronic Fatigue Syndrome) பாதிப்பாகக்கூட இருக்கலாம்.


`க்ரானிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்' பாதிப்பை உறுதிப்படுத்த பிரத்யேக டெஸ்ட் கிடையாது. அறிகுறிகள், உடல், மனநல பிரச்னைகள் ஆகியவற்றைப் பொறுத்து அது உறுதிசெய்யப்படும். அறிகுறியின் தீவிரத்துக்கேற்ப கவுன்சலிங், தெரபி, பயிற்சிகள் போன்றவை பரிந்துரைக்கப்படலாம்.