ஆப்ரிகாட் பழம் உடலில் உள்ள பல நோய்களைக் குணப்படுத்தும்

ஆப்ரிகாட் பழம் பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது இந்த பழம். இது நமது உடலில் உள்ள பல நோய்களைக் குணப்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டது.

இந்த பழம் கண்கள் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தமான எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அவற்றில் இருந்து விடுதலை பெறலாம்.

இந்த பழத்திற்கு இரத்த சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தி அதிகமாகும். இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும். இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கி விடும். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சாதியை அதிகரிக்க செய்கிறது. எந்த தொற்றுநோய்களை நமக்கு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

இந்த பழம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்பாடாகி கூடிய ஒவ்வாமை, அழற்சி காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.