கொழுப்பை குறைக்க உதவும் ஆவாரம்பூ

சென்னை: ஆவாரம்பூவால் நீரிழிவு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும். வெயில் காலத்தில் இந்த தேநீருடன் சிறிது தேன், சென்னை: ஏலக்காய் கலந்து குடித்தால் வறட்சி நீங்கும். ஆவாரம் பூவில் செய்யப்படும் தேநீர் சிறுநீர் எரிச்சல், சிறுநீரகக் கல் போன்றவற்றில் இருந்தும் நமக்கு தீர்வு கொடுக்கும். உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கும் இது உதவுகிறது.


தற்போது பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் மார்பக புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. நமக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயத்தில் இந்த ஆவாரம் பூவை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வருவதன் மூலம் உடலில் வெப்பம் குறைக்கப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்குவதற்கு இந்த ஆவாரம்பூ பெரிதும் உதவுகிறது. இந்த ஆவாரம் பூ பொடியை மாதவிடாய் நாட்களில் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி சரியாகும். இந்த ஆவாரம் பூவுடன் சிறிது பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். இப்படி ஆவாரம்பூ உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் அழகையும் பாதிக்கிறது.

சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய இந்த ஆவாரம்பூ நமக்கு உதவுகிறது. நமக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் இந்த ஆவாரம் பூ, வேர் மற்றும் இலைகளை நீரில் கொதிக்க வைத்து இளம் சூடாக அந்த காயத்தின் மேல் கழுவி வந்தால் காயம் விரைவில் ஆறும்.

மேலும் கை கால் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் இந்த ஆவாரம்பூ பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்.

பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆவாரம் பூ பொடியுடன் வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஷாம்புவை கொண்டு தலை குளித்தால் பொடுகு தொல்லையிலிருந்து தீர்வு கிடைக்கும்.