சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தரும் மிளகின் நன்மைகள்

சென்னை: இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு மூதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு பிபெரசீயஸ் என்னும் தாவர வகையைச் சேர்ந்தது இதை மசாலாப் பொருளாகவும் ஒரு வித மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உணவு கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் மிளகு பயன்படுத்துகின்றனர். மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்f;காது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும்.

லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது… புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து.