தினமும் 5 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஊட்டச் சத்துக்களைப் பெறுவதற்கு முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன், பருப்புகள், உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

அந்த வகையில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சம் பழம், அத்தி பழம் ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் அடங்கி உள்ளன.

பாதாமை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 100 கிராம் பாதாம் பருப்பில் 50 கிராம் கொழுப்பு, 21 கிராம் புரதம் மற்றும் 22 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 13 கிராம் நார் சத்து உள்ளது.

நன்மைகள்: தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக் கோளாறு, இதய நோய், நீரிழிவு நோய், சருமப் பிரச்சினை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல் நீங்க: தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்புகளை ஈப்பிடுவதன் மூலம் மலச் சிக்கலில் இருந்து விடுபடலாம். உடல் எடை குறைய: உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள், தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள், ரத்தத்தில் ஆல்ஃபா டோகோபெராலை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது, பாதாம். இதில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.