நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும்

இயற்கை உணவு: நம்முடைய உடலில் வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் நாம் அதற்காக கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவது மிகவும் தவறு. நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது.

நாம் சாப்பிடும் கீரைகளில் ஒன்றான இந்த பசலை கீரையில் வைட்டமின் ஈ சத்து மிகுந்த அளவு உள்ளது. மேலும் இதுல உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம்முடைய உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் இதனை டயட்டில் எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வேர்க்கடலை: வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். இதிலும் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. தினமும் சிறிது வேர்க்கடலை சாப்பிடுவதால் நமக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.கால் கப் வேர் கடலையில் 20% வைட்டமின் ஈ சத்து உள்ளது.