வெள்ளை பூசணி ஜூஸ் சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பயன்கள்

சென்னை: வெள்ளை பூசணி ஜூஸ் சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் காலையில் வெள்ளைப் பூசணியின் சாறுடன் தேனைக் குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படுவதோடு, வயிற்றில் தொற்றுக்கள் ஏற்படாது.

வெள்ளைப் பூசணி சாறு தினமும் காலையில் வெறுமனே குடித்துவர உடல் எடை குறையும். இந்த சாற்றில் அதிகளவு நீர்ச்சத்து காணப்படுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படும்.

உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் தினமும் வெள்ளைப் பூசணி சாற்றை குடித்து வர உடல் சூடு தணிக்கப்படும். அத்தோடு, உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு, உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளைப் பூசணி சாறினை தேனுடன் கலந்து ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் குடித்து வர இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.