அதிக சத்துக்கள் நிறைந்த தர்பூசணி பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: மற்ற பழக்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் தர்பூசணி பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் வல்லமை கொண்டது. தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.

தர்பூசணியில் அதிக அளவு நீர் தான் இருக்கிறது கலோரியானது குறைவாக தான் இருக்கிறது எனவே இது எடையை குறைக்க உதவுகிறது. தர்பூசணி தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்கும்.

ஒருசிலருக்கு வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா வருகிறது எனவே தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.