இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்

சென்னை: இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம். பரபரப்பான வாழ்க்கை முறையால், நம் உடலில் பல சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இதனால் உடல் நலனில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரும்புச் சத்து குறைபாடு இன்று பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது. இந்த குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் தேவையான அளவு இரும்பு சத்தை சேர்க்க வேண்டும். இரும்பு சத்து நமது இரத்தத்தின் இன்றியமையாத கூறாகும். இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாக, உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தில் அடைப்பு ஏற்படலாம். இது நமது பல்வேறு உறுப்புகளை பாதிக்கிறது. ஆகையால் உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருப்பது அவசியமாகும். இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பூசணி சாறு: பச்சை காய்கறிகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. காலை உணவாக பூசணிக்காய் சாற்றை உட்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, தினமும் காலையில் காலை உணவாக பூசணி சாறு குடித்தால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்.

கொண்டைக்கடலை பரோட்டா: கொண்டைக்கடலை இரும்பின் சிறந்த மூலமாகும். இதை காலை உணவாக உட்கொள்வதால் உடலுக்கு இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும். கொண்டைக்கடலை பரோட்டா செய்ய, அதை வேகவைத்த பிறகு, அதில் சில மசாலாப் பொருட்களைக் கலந்து, கோதுமை மாவில் கலந்து பரோட்டாவாக சுடவும். கொண்டைக்கடலை சுண்டலும் மிக நல்லது.

ஆளி விதை ஸ்மூத்தி: எள் மற்றும் ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடுதலாக, அவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாகவும் உள்ளன. இவை இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இவற்றை தினமும் உட்கொள்வதால் இரும்புச்சத்து பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை உட்கொள்ள, ஆளி விதையை ஒரு நாள் இரவு முன்பு ஊறவைத்து, காலையில் எழுந்ததும், அதை அரைத்து, ஸ்மூத்தி செய்து, தினமும் காலையில் உட்கொள்ள வேண்டும்.