இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் இலவங்கப்பட்டை

உணவே மருந்து என்பது தான் நம் பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கும் பழக்கவழக்கமாகும். வீட்டில் உள்ள சமையலறையில் இருப்பது வெறும் உணவுபொருள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் ஒரு மருந்து பொருளாகும்.

குறிப்பாக மசாலா சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள், நறுமண பொருட்களும் கூட பராம்பரிய மருத்துவத்தில் இன்றியமையாதது ஆகும். அவற்றில் ஒன்று தான் இலவங்கப்பட்டை.

சின்மமோம் என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரத்தில் இருந்து வருவதே இலவங்கப்பட்டை. இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பல சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்பநிலையை இலவங்கப்பட்டை குணப்படுத்த உதவுவதாக எண்டோகிரைன் சொசைட்டியின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்டோகிரைன் சொசைட்டியின் அறிக்கையின்படி, முன்நீரிழவு நோயுள்ள 51 பேர் மீது 12 வாரங்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோயிலிருந்து ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

இந்த ஆய்வு தொடர்பாக நீரிழவு மையத்தின் பேராசிரியர் கூறுகையில், எங்கள் 12 வார ஆய்வில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இரத்தத்தின் சர்க்கரை அளவு சீராக உள்ளது. இதன் மூலம் உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பதன் நமக்கு நன்மை பயக்கும் என்பது காட்டுகிறது இவ்வாறு கூறுகிறார்.

மேலும், இந்த கண்டுபிடிப்புகள் இலவங்கப்பட்டை காலப்போக்கில் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.