தொற்று நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்

நம் அன்றாட வாழ்க்கையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்று நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும்.

நம் அனைவருக்குமே சிட்ரஸ் பழங்கள் மீது ஓர் ஈர்ப்பு; வெயில் காலத்தில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜுஸ் தான் நம் அனைவரின் தேர்வாக இருக்கும். ஆனால் சிட்ரஸ் பழங்களில் அதிக நன்மை இருக்கிறது என்று நம்மில் பலருக்கு தெரியாது. இந்த பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க உதவும. இதையும் தாண்டி நம் சருமத்துக்கு அதிக பலன்களை கொடுக்கும்.

வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலில் உள்ள பாக்டீரிய நடவடிக்கை மற்றும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.

ஆரோக்கியமான பொலிவான முகம் வேண்டுமா? அப்போ நிச்சயம் உங்களுக்கு இந்த சிட்ரஸ் பழம் தேவை. முகத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்களை அகற்றி, முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவை ஆரஞ்சு பழம் கொடுக்கும். பழம் என்றால் உள்ளுயிருக்கும் உண்ணக்கூடிய பழம் மட்டுமல்ல வெளியிருக்கும் தோலும் சேர்த்து தான். தோல்களை உலர வைத்து அரைத்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்துங்கள்.