உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?

சென்னை: மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளினால் உடலில் அதிக கொழுப்பு சேருகிறது.

இதில் மிகப்பெரிய அபாயம் என்னவெனில் இவை உடலில் சேர சேர உடனடியாக எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. படிப்படியாக உடலில் சேரும் இந்த கொழுப்பு குறிப்பிட்ட காலத்தில் திடீரென உடலில் பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அதிக அளவில் உண்டாக்குகிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உண்டாகக்கூடிய நோய் பற்றி பார்ப்போம்.

உடலில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக் உருவாக்கத்தினால் இந்த வியாதி உண்டாகிறது. இந்த ரத்த நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்கின்றன.

மேலும் நாளடைவில் இந்த ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தை சிரமமாக்குகின்றன. இதன் காரணமாக ரத்தத்தின் வழியாக ஆக்ஸிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.

அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனரி ஆட்டரி டிசிஸ், நான் அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனறி ஆர்டரி டிசீஸ், ஸ்பான்டேனியஸ் கொரோனரி ஆட்டரி டைசெக்ஷன் ஆகியவை இந்த நோயின் வகைகள் ஆகும்.

உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது, அவை ரத்தம் பாய்வதை தடை செய்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களின் வழியே போதுமான அளவு ரத்தம் கடத்தப்படாத நிலையில் அங்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது.