இரத்த கொதிப்பின் அளவை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது

தினமும் உடற்பயிற்சி செய்வதால் இரத்த கொதிப்பின் அளவை சீராக வைக்கலாம்.

உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற கொடிய நோய்களில் இருந்து போராடி வெற்றியை காணலாம்.

தினமும் உடற்பயிற்சி செய்வதால் இரத்த கொதிப்பின் அளவை சீராக வைக்கலாம். இந்தியாவில் 50 சதவித மக்கள் நீரிழிவு நோய்க்கு தள்ளப்படுகின்றனர். இதனால் உலக சுகாதாரத் துறை, உடற்பயிற்சி செய்வதால் நம் உடலை ஆரோக்கியமாகவும் மற்றும் நீரிழிவு நோய்க்கு முற்றுபுள்ளி வைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

தினமும் 30 நிமிடத்திற்கு உடல்ரீதியாக பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமான உடலிற்க்கு நாமே சொந்தக்காரர்கள்!! “உடலின்றி உயிர் இல்லை” என்ற வரிகளுக்கு இணங்க உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவ்வுடலில் உயிர் நிலைக்காது என்பது தான் உலக நீதி. இதனை மாற்ற யாராலும் இயலாது.

நடனமாடுவது, எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. தினமும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் உங்களுக்கு பிடித்தமான பாடலிற்கு நடனமாடுவது என்பது ஒரு வித உடற்பயிற்சி ஆகும். அவ்வாறு நடனமாடுவது மூலம் நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக்க உதவுகிறது. சிலர், நடனமாடுவதால் மனதில் ஏற்படுகின்ற தேவையற்ற குழப்பங்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவார்கள்.

இதனை ஒரு பொழுது போக்கும் விதமாகவும் செயல் படுத்தி வருகின்றனர். வாரத்தில் ஐந்து நாட்கள் இவ் உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது நமது சுவாசபைகளில் அடைத்திருக்கும் கெட்டவற்றை நீக்குகிறது. இதனால் தோட்டத்தை பாராமரித்து அதில் ஏற்படுகின்ற தூய்மையான காற்றை சுவாசியுங்கள். அவ்வாறு செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் இரத்த போக்கு சீராகவும் செயல்படும். இதேபோல் நடைபயிற்சி மிக எளிய வகையான உடற்பயிற்சி ஆகும். இதற்காக நீங்கள் தனி நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

மாலை நேர வெயிலில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். 2014,ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி நடைபயிற்சி செய்வதால் நீரிழிவு நோயின் இரண்டாவது பிரிவையும் மற்றும் உடல் எடையும் குறைக்கலாம் என்ற தகவலை வெளியிட்டு உள்ளனர். யோகா உடற்பயிற்சி, சுமார் 500 வருட பாரம்பரிய உடற்பயிற்சி ஆகும். யோகா என்பது மனரீதியான உடற்பயிற்சி எனவும் கூறலாம். ஏனென்றால் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடிவு பெறலாம். அது மட்டும் இல்லாமல் தசைகளும் வலிமை பெறுகிறது.