ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கும் பரங்கிப்பழ விதைகள்

சென்னை: பாதாம், பிஸ்தானு அதிக விலை விற்பதை கௌரவமாக வாங்கி சாப்பிட்டு வருகிறோம். நம்ம நாட்டுல நாம் வீட்டுக்கு அருகில் சுலபமாகக் கிடைக்க கூடிய பரங்கிப் பழ விதைகளை குப்பையில் தூக்கி எறிந்து விடுகிறோம்.

நாம் தூக்கி வீசும் இதன் விதைகள்தான் அரேபியர்கள் கைகளில் எப்போதும் இருக்கும். அரேபியர்கள் இல்லற வாழ்வில் முழு நிறைவோடு வாழ முதற் காரணம் நம் ஊர் பரங்கி விதைகள்.

இந்த பரங்கிப் பழங்களை நாம் குப்பையில் தூக்கி எறிவோம். இந்த பரங்கி பழ விதைகள் விலை மதிப்பு மிகுந்தது. இப்ப இயற்கை உணவு, பாரம்பரிய உணவு வகைகள் தற்போது பணக்காரர்கள் உணவாக மாறி இருக்கிறது.

பரங்கி விதைகளை நாம் தொடர்ந்து உண்டு வரும் போது புகை பழக்கம், மது பழக்கம் வேகமாக மறந்து போகும் உடல் மற்றும் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பரங்கிப் பழம் நம்ம ஊரில் சும்மாவே கிடைக்கும். அப்படி கிடைத்தால் அந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் கூட அதன் விதைகளை எடுத்து காயவைத்து எடுத்து வையுங்கள்.

ஒரு முறை அந்த விதைகளை உங்கள் வாய்மென்று விட்டால் அடுத்து அடுத்து அந்த விதை உங்களை உண்ணத் தூண்டும். அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததுதான் பரங்கிப்பழ விதைகள்.