உடல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கொய்யா

சென்னை: கொய்யா உடல் சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து நிறைந்த பழங்களில் கொய்யா பழமும் ஒன்றாகும். இதனை உட்கொள்வதால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாவின் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொய்யாவில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைட்டமின் சி, கே, பி6, ஃபோலேட், நியாசின், துத்தநாகம், தாமிரம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற பண்புகள் நிறைந்த இப்பழங்கள் நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக இருக்க வைத்து, சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, நீரிழிவு நோயாளிகள் காலை உணவுக்குப் பிறகும், இரவு உணவிற்கு முன்பும் எந்த நேரத்திலும் கொய்யாப்பழத்தை உட்கொள்ளலாம். கொய்யாப்பழத்தை காலையில் வெறும் வயிற்றிலும், உறங்கும் நேரத்திலும் சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் 1-2 கொய்யாப்பழம் போதுமானது.

ஒரு கொய்யாவில் 4.9 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. இது மிகவும் குறைவான அளவாகும். சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு கொய்யாப்பழம் சாப்பிட்டாலும், சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் இல்லை.