பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

நாள்தோறும் நின்றபடியே வேலை செய்பவர்கள் தினந்தோறும் பாதங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு தூங்கினாலே நல்ல பலன் கிடைக்கும். பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகமாக மூட்டு வலி உள்ளவர்கள் மற்ற எந்த மருத்துவத்தை காட்டிலும், சாதாரண எண்ணெய் மசாஜ் போதும் மூட்டு வலிக்கு உடனடி தீர்வு தருவதற்கு. வலி இருக்கும் மூட்டு பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தாலே அதிகப்படியான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். எலும்பு குறைபாடு உள்ளவர்கள் எண்ணெய் மசாஜ் தொடர்ந்து செய்வது நல்லது.

சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு பயங்கரமாக வலி ஏற்படும். இப்படிப்பட்ட வலிகளை உணரும் பெண்கள் நல்ல பாத மசாஜ் செய்தால் போதும் எல்லா வலிகளும் குறையும்.

உடலின் ஆரோக்கியம் சரியாக இருக்க வேண்டுமானால் நீரேற்றம் மிகவும் முக்கியம். உங்கள் உடலில் அடிக்கடி நீரிழப்பு ஏற்பட்டால் உடனே உங்களது இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளவும். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன்பு 10 நிமிடங்கள் உங்கள் பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இதன்மூலம், உடலில் இரத்த ஓட்டம் சமமாகி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுப்பதால், இரத்த அழுத்தம் சீராகும்.

சீரான இரத்த ஓட்டமானது உடலுக்கு மிக அவசியம். அதற்காக தான், இரவு தூங்குவதற்கு முன்பு பாதங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் சீரான இரத்த ஓட்டம் கிடைக்க பெற்று தசை பிடிப்பு மற்றும் உடற்சோர்வு ஆகியவை நீங்கும்.