பல வியாதிகளை குணப்படுத்தும் விளாம்பழம்!!

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ, வைட்டமின் பி2 சத்துக்களும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.

விளாம்பழத்தில் உள்ள வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. சிறிது சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.