அதிகரிக்கும் வைரல் காய்ச்சல் .. பரவுவதற்கான காரணம் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் இதோ

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வைரல் காய்ச்சல், ஃப்ளு வகை காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். பெரும்பாலும் சளி, இருமல் உள்ளிட்டவை காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.

இதனை அடுத்து இந்த பல விதமான காய்ச்சல் பரவுவதற்கு பருவநிலையில் ஏற்படும் மாற்றம் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. மேலும் இதுமட்டுமல்லாமல், கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் காய்ச்சலுக்கு அடிகோலாக அமைகிறது.

எனவே இந்த கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக காய்ச்சல் பரவலை குறைக்க முடியும். முதலில் இதற்கு வீட்டைச் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக், டயர் மற்றும் பிற பொருட்களில் மழைநீர் தேங்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

இதே போல குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும் குழந்தைகளை கொசுக்களிலிருந்து பாதுகாக்க கை, கால்களை முழுதாக மூடுவது போன்ற உடைகளை அணிய வேண்டும். மேலும் அத்துடன் காய்கறிகள், பழங்கள் என சத்தான உணவுகளை உண்ண வேண்டும். எனவே இதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வராமல் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.