உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன் தேன்

சென்னை: தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை. உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன் தேன் என்றாலும் ஆச்சரியப்படுவதற்ல்லை. உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் கெட்டும் போகும் தன்மை உடையது


ஆனால் தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். (தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்) இதுதான் தேனின் இயல்பு. ஆனால் இந்த தேன் மனித இனத்திற்கு மிகுந்த பயனுள்ள ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுகிறது.


இன்றைய சூழ்நிலையில் இதயக் கோளாறு மிகுந்த வேகமாக பரவிவரும் ஒரு கொடிய நோயாக இனம் காணப்படுகிறது. எல்லா வயதினரையும் தாக்கும் நோயாகவும் இது உள்ளது.

இந்த நோய் ஏற்பட மிக முக்கிய காரணம் மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவ்வாறான கொடிய நோயை எளிதாக தீர்க்கும் சக்தி தேனுக்கு உண்டு.

இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.

இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் வராது.