எத்தனை... எத்தனை மருத்துவக்குணங்கள்... கொத்தமல்லி தழையில்!!!

சென்னை: அட இது வாசனைக்கு போடறது தானேன்னு நீங்கள் நினைககும் கொத்தமல்லியில் எத்தனை மருத்துவக்குணங்கள் இருக்கு என்று தெரியுங்களா?

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொத்தமல்லி தன்னகத்தே கொண்டுள்ளதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி என பல வைட்டமின் சத்துக்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேலும், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக கொத்தமல்லி இருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.

இத்தகைய ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கொத்தமல்லியை எளிதில், வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு தொட்டியில் கூட வளர்க்க முடியும். கொத்தமல்லியை தினமும் சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும் மருத்துவ காரணியாக கொத்தமல்லி செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய் நாற்றம் உள்ளவர்கள் கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால், அவர்களது வயிற்றில் உள்ள புண் குணமாகி, துர்நாற்றத்திற்கு பதிலாக புத்துணர்ச்சி வீசும்.