வயிற்றுப்புண்ணால் அவதியா... சரியான தீர்வு பூசணிக்காய் சூப்

சென்னை: மாறிப்போன நம் உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. முக்கியமாக இளம் தலைமுறையினர் வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகின்றனர்.
அதிக காரம், பாஸ்ட் புட் போன்ற உணவுகளால் வயிற்றில் புண் உருவாகி பெரும் அவஸ்தையை கொடுக்கிறது. இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்!
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்,வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,கொத்தமல்லித்தழை – சிறிதளவு,பால் – ஒரு டம்ளர்,மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,பூண்டு – 2 பல்,சின்ன வெங்காயம் – 4,உப்பு – தேவையான அளவு

செய்முறை: வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.