இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்

சென்னை: பித்தம் சமநிலையில் இருக்கும்... இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

பெண்களுக்கு மாதாமாதம் உருவாகும் மாதவிடாய் காலத்தில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். இந்த சமயத்தில் பெண்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

40 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும். இலந்தை மர இலைகளை நன்றாக அரைத்து காயங்கள் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

இலந்தை மர இலை சாறெடுத்து வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். கை, கால்களில் புண் இருப்பவர்கள், வாய் வீக்கம் இருப்பவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறிவிடும். பல் ஈறுகளில் இரத்த கசிவு, உதடு, வாயில் புண் போன்றவைகள் எது இருந்தாலும் இப்பழம் குணமாக்கும்.

இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும். இலந்தை மர இலையை அரைத்து புளித்த மோரில் சிறிதளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு நீங்கும்.