அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த பலாப்பழம்

சென்னை: பலாப்பழத்தின் சுவைக்கு ஈடு இணை இல்லை. அதேபோல் அதில் உள்ள மருத்துவ குணத்திற்கும்தான். பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போமா!!!

முக்கனிகள்... மா, பலா, வாழை. இதில் பலாப்பழத்தின் வாசனையே நாக்கை சப்புக் கொட்டச் செய்யும். இதன் சுவைக்கு வேறு எதையும் ஈடாக சொல்ல முடியாது. பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மட்டுமின்றி மருத்துவ குணமும் கொண்டது.

இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்றவை அடங்கி உள்ளன.

பலாச்சுளையில் இருக்கும் பொட்டாசியம் அதிகம். இதனால் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உடல் மிகுந்த ஆரோக்கியம் அடைகிறது.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் படும் கஷ்டம் மிகவும் அதிகம்தான். அதிலும் குளிர்காலத்தில் சொல்லவே தேவையில்லை. இவர்களுக்கு சிறந்த மருந்து ஒன்று உள்ளது. பலா மரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா அப்படின்னா... என்னவென்று கேட்பார்கள். அந்தளவிற்கு மருத்துவ குணம் நிறைந்தது.

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் பலாச்சுளையை சாப்பிட்டு வந்தால் இந்த குறைபாடு குணமாகும். மேலும் உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது பலாப்பழம். குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதால் எலும்புகள் வலுவடைகின்றன.

பலாப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக உள்ளது. அதுமட்டுமா? நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் எதுவென்று கேட்டால் நிச்சயமாக அது பலாப்பழம்தான். அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்துவதிலும் இதற்கு முதன்மையான இடம்தான்.

பலாப்பழத்தில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்தது. பலாப்பழத்தை சாப்பிட்டு வருபவரக்ள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இதை எல்லாம் அறிந்துதான் நம் முன்னோர்கள் முக்கனிகளில் பலாப்பழத்திற்கு 2ம் இடம் கொடுத்துள்ளனர்.