உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் குடம் புளி

சென்னை: குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

குடம்புளிக்கு பல பெயர்கள் உண்டு. பொதுவாக குடம்புளி, மலபார் புளி, பானைப்புளி, கோடம்புளி, மீன்புளி, மற்றும் பழம்புளி என பல ஊர்களில் அழைக்கப்படுகிறது.

குடம்புளி எடுத்துகொள்வதன் மூலம் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணக் கோளாறு கொண்டிருப்பவர்கள் குடம்புளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.

குடம்புளியின் பழத்தோலில் இருந்து சாறு எடுத்து வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக தரலாம்.

இதில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், இதயத்தை காக்கும் தன்மை மிக்கது. குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

குடம்புளி டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. குடம்புளியின் இலைகள் மற்றும் பழங்களில் கால்சியம், இரும்பு போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஆழ்ந்த தூக்கத்தை உறுதி செய்வதற்கு முக்கியமானவை.

குடம்புளி செடியின் இலைகளை நன்கு மைய அரைத்து, அந்த விழுதை முடி மற்றும் உச்சந்தலை முழுவதும் தடவி வர பொடுகு, தொற்று மற்றும் தொடர்ச்சியான அரிப்புகளை முற்றிலும் நீக்குவதோடு, முடி உதிர்வையும் வெகுவாகக் குறைக்கிறது.

அளவுக்கு அதிகமாக குடம் புளி சேர்த்தால் இரத்தம் உறைதல் தொந்தரவு பிரச்சனை ஏற்படும் என்பதால் இதை அளவாக பயன்படுத்துவது நல்லது.