லவங்கம் நம் இதயத்தை காக்கும் அற்புத குணம் கொண்டது

சென்னை: இதயம் காக்கும் லவங்கம் பற்றி தெரிந்து கொள்வோம். இதனால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

லவங்கத்தின் மொத்தப் பகுதியிலும் நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பு எனப்படும் லவங்கத்தில் அதன் தாக்கம் ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ குணம் உள்ளது.

லவங்கம் சுவைக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டுக்கு அடுத்தபடியாக உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதிலுள்ள பாலிஃபினால் உணவுக்கு சுவை கூட்டுவதுடன், விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் நன்மையை கொண்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழிக்கும் சில பொருட்களில் லவங்கப்பட்டையும் ஒன்று. இன்சுலின் சுரப்பை சீராக்குகிறது. இதய நோய்க்கு முக்கிய மூலகாரணம் ஆன நீரிழிவை வராமல் தடுக்கிறது.

கொழுப்பு அளவையும், டிரைகிளிசரையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் குளூக்கோஸின் அளவை சீராக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இன்சுலினுக்கு மாற்றாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.