கடுக்காயில் நிறைந்துள்ள மருத்துவக்குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

சென்னை: கடுக்காயின் மருத்துவ குணங்கள்... பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

அதன் பிறகு அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கடுக்காயை இரண்டாக உடைத்து, அதன் உள்ளிருக்கும் பருப்பை நீக்கி விடவும். அதன்பிறகு தூளாக்கி வைத்து, தினசரி இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் (5 கிராம்) தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

அவ்வாறு செய்து வந்தால் மலச்சிக்கல், ரத்த மூலம், உள்மூலம், வாய்ப்புண், தொண்டை புண், நரம்புக் கோளாறுகள், ஆண்மைக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். உடல் பித்தம் தணியும், மனதையும் ஒரு நிலைப்படுத்த உதவுகிறது.