சளி, இருமல், தொண்டை வலியை போக்கும் அதிமதுரம் சுக்கு சூப்

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :


அதிமதுரம் தூள் - அரை டீஸ்பூன்
சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்
திப்பிலி பொடி - கால் டீஸ்பூன்
பாதாம் - 6
தண்ணீர் - 2 கப்

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கிவிட வேண்டும். சுடு நீரில் அதிமதுரம் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி ஆகியவற்றை கொட்டி இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகலாம். பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும். சூப்பரான அதிமதுரம் சூப் ரெடி.