கேரட் மூலம் பல நோய்கள் குணமாகும்

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதைஆய்டுது தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் மொறு மொறுவென குறைந்த இனிப்புச் சுவையில் நன்றாக இருக்கும்.

1.பொதுவாக ஒருவர் தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வரும்பொழுது அது அவரின் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

2.ஒரு கப் கேரட்டில் மிக குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. ஆனால் அதிக அளவு ஊட்டச்சத்து இதில் காணப்படுவதால் இதன் மூலம் உடல் எடை குறையும் .

3.கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.


4.சிலருக்கு சரும பிரச்சினை இருக்கும் .இந்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கேரட்.

5.கேரட் முகத்தில் ஏற்படக்கூடிய முகப்பரு, தோல் அழற்சி, சொறி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும்

6.கேரட்டில் காணப்படக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பி கரோட்டின் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

7.மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது கேரட்.

8.கேரட்டில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

9.இதன் இம்மியூனிட்டி பவரால் நுண்கிருமிகள் உடலில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

10.நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வரும் பொழுது அது கரோனரி இதய நோய் வருவதை தடுக்கிறது .

11.மேலும் கேரட் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும். சருமம் பளபளக்கும்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.