ஏராளமான உடல் ஆரோக்கியத்தை அளிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்

சென்னை:பசலைக்கீரை சாப்பிட்டால் ஏராளமான உடல் ஆரோக்கியத்தை பெறலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக கீரை வகைகளை நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.


அந்த வகையில் அதிக ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ள பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நம் உடலை எந்த ஒரு நோய்களும் அண்டாது. அதே போல் உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் இந்த பசலைக்கீரைக்கு இருக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கும்.


இது போன்று ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு இந்த பசலைக்கீரை அள்ளித் தருகின்றது. பசலையில் பலவகைகள் இருக்கின்றன இந்த கீரையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். பசலைக்கீரை பயன்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக கோடை காலம் வந்து விட்டால் அதனுடன் ஏராளமான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படும். அந்த வகையில் கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வேர்க்குரு.

இதனை சரி செய்ய பசலைக்கீரையின் இளம் தண்டு பயன்படுகிறது. அதாவது பசலைக்கீரையின் தண்டினை அரைத்து வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்தால் இந்த வேர்க்குரு பிரச்சனை குணமாகும். அதே போல் வேர்க்குரு பிரச்சனையால் ஏற்படும் எரிச்சல்களும் குணமாகும்.

உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். எனவே பசலைக்கீரையை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம், உடலில் புதிய ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.

பொதுவாக உடல் சூட்டினால் ஏற்பட கூடிய பிரச்சனைகள் என்று பார்த்தால் கண் எரிச்சல், நீர்க்குத்தல், சிறுநீர் எரிச்சல், வெள்ளை படுத்தல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். இவற்றில் இருந்து தப்பிக்க பசலைக்கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிடுங்கள்.