உடல் எடை குறைய இயற்கை பானங்கள் போதுமே!!!

சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து கஷ்டப்படுவார்கள், அப்படி நீங்கள் தினசரி செய்யும் உடற்பயிற்சியோடு சேர்த்து சில இயற்கையான வீட்டிலேயே தயாரிக்க கூடிய பானங்களையும் பருகினால் விரைவில் உடல் எடை குறைந்து நீங்கள் பிட்டாக இருக்கலாம்.

நீங்கள் இயற்கையான பானங்களை குடிப்பதால் உங்களுக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. பொதுவாக இஞ்சி உடலின் செரிமானத்தை சத்தியை அதிகப்படுத்த உதவுகிறது, அதேபோல எலுமிச்சை உடல் எடை குறைப்பிற்கு உதவுவதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது. சிறிதளவு இஞ்சியை அரைத்து அதனுடன் சீரக தூள், தண்ணீர், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் பானத்தை குடித்து வர உடல் எடை குறையும்.

பெரும்பாலும் பலர் உடல் எடையை குறைக்க க்ரீன் டீயை குடிக்கின்றனர், ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் 6-7 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் க்ரீன் டீயை போட்டு அதில் பாதியளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்து இந்த பானத்தை குடித்து வர உடல் எடை குறையும்.

அன்னாசிப்பழத்திலுள்ள மாங்கனீசு சத்து உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. சில அன்னாசிப்பழ துண்டுகளை அரைத்து சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறு, பிளாக் சால்ட் மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து பானமாக குடித்து வரலாம். பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த பிளாக் காஃபியில் ஆளிவிதைகளை கலந்து அதனுடன் சுவைக்காக டார்க் சாக்லேட் சேர்த்து குடித்து வர உடல் எடை குறையும்.

அடுத்ததாக இலவங்கப்பட்டை உடலில் 20% வெப்பத்தை அதிகரிக்கிறது, இதனால் கொழுப்புகள் உடலில் எரிக்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் நமக்கு உணவுகளின் மீதான நாட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வருகிறது.


ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் 2 ஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து ஆறவைக்க வேண்டும். பின்னர் அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர உடல் எடை குறையும்.