இதய நோய் வராமல் தடுக்கும் குணம் கொண்ட பேரீச்சை பழம்

சென்னை: பேரீச்சை பனை வகையைச் சேர்ந்தது. பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. இதய நோய் வராமல் பாதுகாக்கும் குணம் கொண்டது பேரீச்சை பழம்.

'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. கரையக்கூடியது.

இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும். பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.